விமானம் மோதி விபத்து.. விமானி உட்பட 7 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு!

துருக்கி நாட்டில் சிறிய ரக விமானம் மோதி விபத்துகுள்ளானதில், விமானிகள் உட்பட 7 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி நாட்டில் காவல் துறையினருக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானம், கண்காணிப்பு பணியை மேற்கொண்டது. அப்பொழுது கிழக்கு துருக்கியில் உள்ள ஆர்டோஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அவர்கள், வான் மற்றும் அண்டை மாகாணமான ஹக்கரி மீது கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு, விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் விமானம் ரேடாரில் இருந்து மறைந்த தாகவும் அவர் தெரிவித்தார்.
அந்நாட்டு நேரப்படி, அதிகாலை 3 மணியளவில் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார் . அந்த விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகள் உட்பட அனைவரும் தேசிய காவல் துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சோய்லு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025