கருப்பின இளைஞரை முழங்காலால் அழுத்திய போலீசார் பணியிடை நீக்கம்.!

இங்கிலாந்தில் கருப்பின இளைஞரை கழுத்தில் முழங்காலால் அழுத்திய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் உள்ள ஸ்லிங்டன் என்ற இடத்தில் சந்தேகப்படும் படி இருந்த கருப்பின இளைஞர் ஒருவரை இரு போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது அந்த இளைஞர் காவலர்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அந்த கருப்பின இளைஞரை கீழே தள்ளிய போலீசார்கள், அந்த காவலர்களில் ஒருவர் கருப்பின இளைஞரின் கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர் வலியால் துடித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து கருப்பின இளைஞரை முழங்காலால் அழுத்திய காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பின இளைஞரும் இதுபோல கழுத்தில் முழங்காலால் அழுத்தப்பட்டதால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பல நாடுகளில் போராட்டம்நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025