நிதி அகர்வால் தமிழ் மொழியை கற்பதாக கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நிதி அகர்வால், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது தமிழிலும் களமிறங்கியுள்ளார். ஆம் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் பூமி படத்தில் நிதி அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெயம் ரவி நடிக்கிறார். டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தில் ரோனித் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் புதிய முறைகளை படித்து கையாளுவதும், உடற்பயிற்சி செய்வதும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதை போன்ற வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நிதி அகர்வால் தமிழ் மொழியை கற்பதாக கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்தில் எழுதி தங்கிலீஷ் மூலம் தமிழ் கற்று வருகிறார், நிதி அகர்வால். எனவே அவர் விரைவில் சரளமாக தமிழ் பேசுவார் என்று கருதப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…