மிரட்டல் தோற்றத்தில் பிரபுதேவா… வெளியானது “பொய்க்கால் குதிரை” பர்ஸ்ட் லுக்.!

பிரபுதேவாவின் 54 வது படத்திற்கு “பொய்க்கால் குதிரை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா தற்போது தனது 54-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இருட்டு அறையில், முரட்டு குத்து படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடிகை, ரைசா வில்சன், வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முகத்தில் இரத்ததுடன் கையில் ஒரு குழந்தையுடன் ஒற்றைக்காலில் பிரபுதேவா இருக்கிறார். படத்திற்கு “பொய்க்கால் குதிரை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
Here’s the #FirstLook of my next movie #PoikkalKuthirai
directed by @santhoshpj21 @varusarath5 @immancomposer @raizawilson @prakashraaj @thondankani @Vinod_offl @ministudiosllp @johnkokken1 @ballu_1987 @darkroompic @madhankarky @proyuvraaj pic.twitter.com/9tZCruWZ39— Prabhudheva (@PDdancing) August 4, 2021
பிரபுதேவா தற்போது இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.