சீனாவில் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொவிட் 19 வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது.
இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.இந்த கொவிட் 19 வைரஸ் விலங்குகளிடம் இருந்தே மனிதர்களுக்கு பரவுவதாக விஞ்ஞானிகள் சந்தேகம் அடைகின்றனர்.இதையெடுத்து உகான் நகரில் பாம்பு, பூனை , வௌவால் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உகானை விட சென்ஜென் பெரிய நகரம் என்பதால் இங்கு கொவிட் 19 வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக பயப்படுகின்றனர்.இதன் காரணமாக நாய் , பூனை இறைச்சிகள் விற்பனை செய்யவும் , இறைச்சியாக உண்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம் அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளது.
இதனை ஏற்ற சீன அரசு நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை விதித்துள்ளது.கொவிட் 19 வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பன்றி , முயல், மீன், கோழி, கடல் உணவுகள் உள்ளிட்ட 9 வகையான இறைச்சிகள் மக்கள் உண்ண அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுவரை கொவிட் 19 வைரசால் 2800 மேற்பட்டோர் பேர் உயிர் இழந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…