புஷ்பா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துவருகிறார். தேவ ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடித்து வருகிறார்.
புஷ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானதும்,கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மரேடுமிலி காடுகளில் நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான அல்லு அர்ஜுன் அறிமுக காட்சியை டீசராக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…