கோப்ரா பர்ஸ்ட் சிங்கிள் செய்த சாதனை.!

சியான் விக்ரம் அவர்களின் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது .
விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். சமீபத்தில் கோப்ரா படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிளான ‘தும்பி துள்ளல்’ என்ற அழகான பாடலின் லிறிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது . விவேக் மற்றும் ஜிதின் ராஜ் வரிகள் எழுத ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க ஸ்ரேயா கோஷால் மற்றும் நகுல் அபயங்கர் பாடியுள்ளனர்.தற்போது இந்த பாடல் யூடுபில் 3 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்டு சாதனை படைத்துள்ளது.
#ThumbiThullal gets bigger & bigger ????????
Hits 3 MILLION !! @arrahman‘s MAGIC ❤❤#3MViewsForThumbiThullal
Link :- https://t.co/FmKrXxw1mq#ChiyaanVikram @AjayGnanamuthu @Lalit_SevenScr @SrinidhiShetty7 @shreyaghoshal @NakulAbhyankar @SonyMusicSouth @proyuvraaj pic.twitter.com/XknqLkbhTj
— Seven Screen Studio (@7screenstudio) July 2, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025