புஷ்பா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துவருகிறார். தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும், புஷ்பா படத்தின் முதல் பாடல் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி புஷ்பா படத்தில் முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் 5 பாடகர்கள் பாடியுள்ள பாடல் வெளியாகவுள்ளது என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
Pushpa – The Rise to release in five languages this Christmas.
పుష్ప പുഷ്പ புஷ்பா ಪುಷ್ಪ पुष्पा pic.twitter.com/bSSF9qfGGY
— Allu Arjun (@alluarjun) August 3, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025