#TamilCinema2019 : இந்திய அளவில் முதலிடம்! உலக அளவில் 7வது இடம்! ரவுடி பேபி சாதனை ஓர் பார்வை..

- தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2வில் ரௌடி பேபி பாடல் இடம்பெற்றுள்ளது.
- இப்படம் யு டியூபில் 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாரி 2. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் நகைச்சுவை, காதல் மற்றும் காமடி கலந்த ஆக்சன் படமாக உருவாகி இருந்தது.
இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி எனும் பாடல் உலகளவில் யூ-டியூபில் பல சாதனைகளை செய்துள்ளது. கடந்த வருடம் இதே மாதத்தில் 21 ஆம் தேதி படம் வெளியாகியது. இந்த ஒரு வருடத்தில் இந்த ரவுடி பேபி பாடல் யு டியூபில் 715 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த வருடம் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய சினிமா பாடல்களின் பட்டியலில் இந்த பாடல் முதல் இடம் பெற்றுள்ளதோடு, உலகளவில் 7 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025