நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக இன்று ஆர்டிஓ விசாரணை..!

கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே பிரேத பரிசோதனையில், சித்ரா தற்கொலை செய்துதான் இறந்தார் என காவல்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியானது.
ஆனால், சித்ராவிற்கும், ஹேம்நாத்திற்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்ததாக ஹேம்நாத் போலீசாரிடம் கூறியுள்ளார்.
போலீசார் ஏன்..? சித்ரா தற்கொலை செய்துகொண்டார், தற்கொலைக்கு யார்..? காரணம் போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரா தற்கொலை தொடர்பாக, ஹேம்நாத்திடம் காவல்துறையினர் 5 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ இன்று விசாரணையை நடத்தவுள்ளார். முதலில் சித்ரா மற்றும் ஹேம்நாத் குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்கவுள்ளார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025