ஜம்மு காஷ்மீரில் 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!

Two Pakistani terrorists killed in a joint operation by security forces and Jammu police in Poonch, Jammu and Kashmir yesterday.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​நகரில் நேற்று பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜம்மு காவல்துறை இணைந்து நடத்தியதாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், ல்ஷ்கர்இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சஜித் மற்றும் பிலால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு ஏ.கே 47 ரைபிள்ஸ், சேட்டிலைட் போன் ஒன்று ஆகியவை அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்திற்கு பயங்கரவாதிகள் வந்தாக தகவல் வெளியானது. இந்த குழுவில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், காஷ்மீரில் நடந்து வரும் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி இது என கூறப்பட்டது.

இதனால், பூஞ்ச் ​​நகரில் பாதுகாப்புப் படையினர் தேடல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது, பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சரணடையச் சொன்னார்கள், ஆனால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.