உச்சம் தொட்ட SAMSUNG…உயர்த்திய நிறுவன அதிபர் காலமானார்…

Default Image

சாம்சங் நிறுவனத்தின் அதிபர்   லீ குன் ஹீ  இன்று காலமானார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும்  தொலைக்காட்சிகள், எலக்ரானிக்ஸ் போன்றவற்றை வர்த்தக சந்தையில் உச்சம் தொட்டு வருகிறது.

சந்தையில் சாம்சங் என்ற தனி பிராண்ட் காரணம் பொருட்களின் தரமான தரம் இதுவே மக்கள் மத்தியில் சாம்சாங்கு மீதான் எதிர்பார்ப்பு அதிகரிக்க வைத்தது என்றே கூறலாம்.

சாம்சங் நிறுவனத்தை உலகளவில் இவ்வளவு மதிப்பு மிக்கதாக உருவாக்கியவர் லீ குன் ஹீ  தனது தந்தையின் இறப்பிற்கு பின் 1987ம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார்.

மேற்கத்திய நாடுகள் சாம்சங் நிறுவனத்தை வெறும் அலட்சியமாகவே பார்த்தார்கள். ஆனால் லீ குன் இடைவிடாத சீரிய முயற்சியால் சாம்சங்கை தொழில்நுட்ப உலகில் கொடிகட்டி இன்று வரை பறக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் தான்  இன்று காலையில் லீ குன் உயிரிழந்ததாக சாம்சங் குழுமம் அறிவித்துள்ளது.மேலும் அவருடைய இறப்புக்கான காரணம் கூறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army