சியான் 60 படத்தில் இணைந்த சனந்த் ரெட்டி…!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

சியான் 60 படத்தில் பிரபல நடிகரான சனந்த் ரெட்டி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். நடிகை சிம்ரன், பாபி சிம்ஹா, வாணிபோஜன் , போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தார்கள்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக இந்த திரைப்படத்தில் நடிகர் சனந்த் ரெட்டி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே பேட்ட, டிமான்ட்டி காலனி, பேட்ட. ஜில் ஜங்க் ஜக் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தத்தகது.
#Sananth Joins the Gang #Chiyaan60
Welcome da … ???????? pic.twitter.com/qd9vMdkFEs
— karthik subbaraj (@karthiksubbaraj) March 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025