ஓடிடியில் வெளியாகும் சந்தானத்தின் ‘சபாபதி’..??

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல்
நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது டிக்கிலோனா, மன்னவன் வந்தானாடி, சபாபதி ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது. இதில் சபாபதி திரைப்பட இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த சபாபதி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் அடுத்த மாதம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!
February 16, 2025