வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் கலர்ஸ் படத்தில் சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் ‘கலர்ஸ்’. நிசார் இயக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் பாறப்புறம் திரைக்கதை எழுதியுள்ளார். இயக்குநர் நிசார் மலையாளத்தில் 25 படங்களுக்கு மேலாக பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் இசையக்கவுள்ளார்.
அஜி இடிக்குலா தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரதீப் நடன கலைஞராக பணியாற்றவுள்ளார். வி. எஸ். விஷால் எடிட்டிங் பணிகள் செய்யும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் தலைவாசல் விஜய், மொட்டை ராஜேந்திரன், இனியா, திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். நேற்றைய தினம் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது வேறு யாரும் இல்லையாம், நடிகர் சரத்குமார் அவர்களின் சகோதரரின் மகனான ராம்குமார் என்று ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனுடன் கலர்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…