சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1,000 கிடையாது….! எத்தனை லட்சம் தெரியுமா…?

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் புதிய பிரமாண பாத்திரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதில், 2019 – 2020-ல் சீமானின் ஆண்டு வருமானம், ரூ.4.72,900 என குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தார். சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் அவர் அளித்திருந்தார். அதில் 2019-2020-ல் சீமானின் ஆண்டு வருமான வெறும் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது.
இந்நிலையில், தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில் எழுத்து பிழை இருப்பதாகவும், திருத்தப்பட்ட புதிய பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் புதிய பிரமாண பாத்திரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதில், 2019 – 2020-ல் சீமானின் ஆண்டு வருமானம், ரூ.4.72,900 என குறிப்பிடப்பட்டிருந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025