முதல் படத்திலே கோரிக்கை வைத்த ஷங்கர் மகள் அதிதி.?

கார்த்தி நடிக்கவுள்ள விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி – முத்தையா கூட்டணியில் உருவாகும் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
இந்த படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்நிலையில், அதிதி ஷங்கர் நடிக்கும் முதல் படம் விருமன் என்பதால், இப்படம் ரசிகர்களிடம் சென்று சேர வேண்டும் என்பதால் படத்தில் தனக்கு மட்டும் குத்து பாடல் ஒன்று வேண்டும் என இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக நெட்டிசங்கள் பரப்பி வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் படத்திற்கான மாற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025