நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சிம்பு – சந்தானம்.?

கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்பு மற்றும் சந்தானம் இருவரும் இனைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில், இந்த படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாகப் படமாக்கவுள்ளார் கோகுல். இதற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகள் அனைத்துமே முடிந்து, நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். படத்திற்கு கொரோனா குமார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது நீண்ட ஆண்டுகள் கழித்து சிம்பு மற்றும் சந்தானம் இருவரும் இனைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக சிம்பு மற்றும் சந்தானம் இருவரும் இணைத்து வாலு திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025