உலகக்கோப்பை போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா அணி

நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிம் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.இப்போட்டியானது கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்நிலையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லா ஸசாய் , நூர் அலி சத்ரான் இருவரும் களமிறங்கினர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.
பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.அப்போது போட்டி 48 ஓவராக குறைக்கப் பட்டது. ஆட்டம் தொடக்கத்திலேயே இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.ஆனால் ஹஸ்ரத்துல்லா ஸசாய் 22 ரன்னில் வெளியேற பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 34.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் சேர்த்தனர்.தென்னாபிரிக்கா அணியில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டை பறித்தார்.
பின்னர் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரர்களாக களமிறங்கி குயின்டன் டி கோக் ,ஹாஷிம் அம்லா இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
அதிரடியாக விளையாடிய குயின்டன் டி கோக் 68 ரன்னில் அவுட் ஆனார்.இறுதியாக தென்னாபிரிக்கா அணி 28.4 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 131 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.