பொன்னியின் செல்வன் படத்தில் புதிதாக பிரபல இயக்குநரான பாலாஜி சக்திவேல் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், ரியாஸ்கான், லால், மோகன் ராமன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிப்பது குறிப்பிடத்தக்கது . ஊரடங்கிற்கு முன்பு இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து மற்றும் புதுவையில் நடைபெற்றது.
தற்போது இந்த படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வைத்து படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது இந்த படத்தில் பிரபல இயக்குநரான பாலாஜி சக்திவேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ஏற்கனவே பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் சரத்குமார் நடிப்பதாக இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் மற்றும் நிழல்கள் ரவி நடிக்க இருப்பதாகவும், பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதால், பாலாஜி சக்திவேலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபு மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் வேறு கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…