கேட்டவுடன் தலைசுற்றவைக்கும் ‘கூகுள் சி.இ.ஓ’ சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விவரம் இதோ!

Default Image
  • கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை சம்பளம் வரும் ஜனவரி முதல் இரண்டு மில்லியன் டாலர் ஆகும்.
  • அதுபோக, 240 மில்லியன் அளவுள்ள கூகுள் நிறுவன பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 

2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தற்போது கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் சி.இ.ஓ-வாக பதவி உயர்வு அடைந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் முதலில் கூகுள் நிறுவனத்தின் குரோம், பிரவுசர், டூல்பார் ஆகிய தலங்களை உருவாக்கும் குழுவின் தலைமை வகித்தார்.

அதன்பின்னர், 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக பணியமர்த்தப்பட்டார். அண்மையில் இவருக்கு கூடுதல் பொறுப்பாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியும் கொடுக்கப்பட்டது.

வரும் ஜனவரி முதல் அவருக்கான சம்பளம் ஆனது 2 மில்லியன் டாலர் ஆகும். அதாவது 14.22 கோடியாகும். அதுபோக 240 மில்லியன் (ஷேர்) பங்கும் கொடுக்கப்பட உள்ளது. இதன் மதிப்பு 1200 கோடி ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்