உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா,கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.இதனிடையே,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.இதனைத் தொடர்ந்து,போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா நேற்று அறிவித்திருந்தது.
ஆனால்,10 வது நாளாக இன்று மீண்டும் போரை ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரின் விளைவாக பல நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடையை விதித்து வருகிறது.
மேலும், சில நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டன. அந்த வகையில்,பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் ரஷ்யாவில் அதன் எதிர்கால திட்டங்களை (ரஷ்ய படங்களை தயாரிப்பதையும், வெளிடுவதையும்) தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில்,உக்ரைன் மீதான தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் தங்களது பணப்பரிவர்த்தனை சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி,தங்களது சேவைகள் உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் செயல்படாது என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. எனினும், தங்களது அரசு வங்கி சேவைகள் பாதிக்கப்படாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…