தமிழில பிளாக் பஸ்டர் வெற்றி .!இனி இந்தியிலும் ஹிட் அடிக்க தயாராகும் மாஸ்டர்.!

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாகுபலி சாதனையையும் முறியடித்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.இதில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்து அதிர வைத்ததுடன்அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஆடவும் வைத்துள்ளது .
50 நாட்களை கடந்து இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மாஸ்டர் படத்தின் இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை எண்டமோல் ஷைன் மீடியா என்ற நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்தியில் ரீமேக்காகும் மாஸ்டர் படத்தில் யார் நடிப்பார்கள் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் மாநகரம் திரைப்படம் இந்தியில் ரீமேக்காகி வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025