23 ஆண்டுக்கு பிறகு இந்நாளில் தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்..!ரெடியாகும் கோவில்
1997 ஆம் ஆண்டுக்கு பிறகு சரியாக சொல்ல வேண்டும் என்றால் 23 ஆண்டு கழித்து உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிப்,5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் சுவாமி சிலைகளுக்கு மாகாப்பு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1997ம் ஆண்டில் இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதப் பின்னர் 23 ஆண்டுகள் கழித்து தற்போது பிப்.5ல் கோலகலமாக நடைபெற உள்ளது.
இதற்காக 2ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டு மூலவர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் முன் திரையிடப்பட்டது.
மேலும் கும்பாபிஷேகத்துக்கு எட்டு கால யாகசாலை பூஜைகள் நடத்த வசதியாக கோவில் அருகே பந்தல் அமைக்கும் பணியும் நடந்து வருகின்றது.
இந்நிலையில் கோவிலின் சன்னிதி மற்றும் திருச்சுற்று மாளிகையில் உள்ள் ஈசான மூர்த்தி சிவலிங்க்கங்கள்-252 விநாயகர் சிலைகள்-12,முருகன் சிலைகள்-8 மற்றும் ஸ்பதக்கன்னிகள் அடங்கிய சிலாமூர்த்திகள் என 338 சிலைகலுக்கு நேற்று மாகாப்பு துவங்கியது.
மொத்தம் 450லி தயிர்,200 கி. பச்சரிசி மாவு ஆகியவற்றால் மா காப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.2 நாட்கள் கழித்து மா காப்பு அகற்றப்பட்டு எண்ணெய் காப்பு சாத்தப்படும்.இந்த பணியினை 50க்கும் மேற்பட்ட சிவ தொண்டர்கள் உழவார பணிகளில் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதற்கட்டமாக பக்தர்கள் வந்து செல்லும் பாதைகள் , வாகன நிறுத்துமிடங்கள்,தரிசன இடங்கள்,என அனைத்தும் தேர்வு பணியும் துவங்கி உள்ளது.