தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் அவரது 64வது திரைப்படமான மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் முடிந்து விடும். அதற்கடுத்ததாக தளபதி விஜய் அவரது 65 வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்காக அவர் வெற்றிமாறன், மகிழ்திருமேனி, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோரிடம் கதை கேட்டு வந்தார். ஆனால், வெற்றிமாறன் மற்றும் மகிழ்திருமேனி வேறு படங்களில் கமிட் ஆகியுள்ளதால், அவர்களால் தளபதி விஜய்யின் படத்தை தற்போது இயக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது.
தற்போது தர்பார் படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் புதிய கதை விவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒருவேளை ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்தது தளபதி விஜய்யின் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம். ஆனால், துப்பாக்கி2 என தலைப்பு மட்டும் கிடையாதாம்.
அந்த தலைப்பு கலைப்புலி எஸ்.தாணுவிடம் உள்ளது. இந்த தளபதி-65 திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…