பிரேமம் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் இந்த நடிகர் தான் பொருத்தமாக இருப்பார். ! இயக்குநரே கூறிய தகவல்.!

நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.
மலையாள சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்ற படங்களில் ஒன்று பிரேமம். movie இயக்கிய இந்த படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஆம் பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் பெரியளவில் ரீச்சானது. தெலுங்கிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது இந்த படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில், இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரபல நடிகரான தனுஷ் நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருப்பதாகவும், மூன்று விதமான கெட்டப்களிலும் அவரால் மட்டுமே நடித்து அசத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025