11 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பெல்ஜியத்தில் கடலோர நகரமான ஆஸ்டெண்டைச் சேர்ந்தவர் லாரன்ட் சைமன்ஸ். இவருக்கு வயது 11. இவர் ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பொதுவாக இளங்கலை பட்டத்தை பெற 3 ஆண்டுகள் ஆகும். ஆனால், இவர் இந்த படிப்பை நிறைவு செய்ய ஒரு ஆண்டு மட்டுமே எடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுவன் ஸைமன்ஸ் கூறுகையில், நான் வயதில் சிறியவனாக இருப்பது குறித்து எனக்கு கவலையில்லை. இது அறிவை பெறுவது பற்றியது. “அழியாமை” என்பது தனது குறிக்கோள் என்றும், நான் உலகின் சிறந்த பேராசிரியர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். அவர்களின் செயல்பாடுகள், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் அறிய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
சிறுவன் ஸைமன்ஸ் தனது உயர்நிலைப் பள்ளி கல்வியை வெறும் ஒன்றரை ஆண்டுகளில் முடித்து, தனது எட்டு வயதில் உயர்நிலைப் பள்ளி டிப்ளோமா பெற்றார். கடந்த ஆண்டு, அவர் கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் மற்றும் குவாண்டம் இயற்பியலில் ஆர்வம் காட்டினார். மேலும் அவற்றைப் பற்றி தன்னால் முடிந்த அனைத்தையும் அறிந்து கொள்வதில் அவர் வெறித்தனமாக இருந்தார். எனவே, இதில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக அவர் தனது மற்ற திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…