ஆடுகளம் படத்தில் இந்த கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது ‘அவ்வை சண்முகி’ குழந்தை நட்சத்திரமாமே.!

ஆடுகளம் படத்தில் ஐரீன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அவ்வை சண்முகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த Ann Alexia Anra தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் தனுஷிற்கு ஜோடியாக டாப்சி நடித்து இருந்தார். மேலம் இந்த திரைப்படத்தில் நரேன், கிஷோர், ஜெயபாலன், முருகதாஸ், சென்றாயன், ஜெயபிரகாஷ் அட்டகத்தி தினேஷ், வினேஷ் பாலாஜி ஆகியோர் நடித்து இருந்தனர் .இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து தேசிய விருது வென்றது.
ஆனால் இந்த திரைப்படத்தில் நடிகை டாப்சி கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது நடிகை த்ரிஷா தானாம்.ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிக்க இயலாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது.அதே போன்று இந்த படத்தில் வந்த ஐரீன் கதாபாத்திரத்தில் நடிக்க கோரி முதலில் Ann Alexia Anra-விடம் தான் கேட்டார்களாம் .இவர் கமலின் அவ்வை சண்முகி படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் அவர் தனது படிப்பிற்காக அப்பட வாய்ப்பை தவற விட்டதாக ஆன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025