மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் டப்பிங் பணிகளை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று லாபம். எஸ். பி. ஜனநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ணி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறும் தருணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. சமீபத்தில் அரசு படப்பிடிப்புகளுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, லாபம் படத்திற்காக விஜய் சேதுபதி தனது டப்பிங் பணிகளை இன்று முதல் துவங்கி உள்ளார். மேலும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கலையரசன் அவர்களும் டப்பிங்கை முடித்துள்ளார். தற்போது டப்பிங் பேசும் விஜய் சேதுபதி மற்றும் கலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…