தனுஷிற்கு நன்றி தெரிவித்த மாஸ்டர் இயக்குனர்..!

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மற்றுமின்றி பல நடிகர்கள் காத்துள்ள திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது.
அதற்கு பிறகு சில தளர்வுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டது.இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் வருகிற 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ” விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாவது சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரைப்படங்களைப் பார்ப்பது தியேட்டர் கலாசாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவம்போல வேறு எதுவும் இல்லை. தயவு செய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படத்தை தியேட்டர்களில் பாருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனரகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் உங்களுடைய உதவிக்கு நன்றி சார் என்று தனது நன்றியை தனுஷிற்கு தெரிவித்துள்ளார்.
Thank you soo much for the support sir ???? https://t.co/RFRfPV6g1k
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 1, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025