அமெரிக்க ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு பறந்த தலிபான்கள்.!

Default Image

ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரில் கீழ் கயிற்றில் தொங்கிய உடலுடன் பறந்த தலிபான்கள்.

ஆப்கானிஸ்தான் கந்தஹார் பகுதியில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் கீழே ஒருவர் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கந்தஹார் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட அமெரிக்க பிளாக் ஹாக் இராணுவ ஹெலிகாப்டரில், தலிபான்கள் ஒருவரைக் கொடூரமாக கொன்று தொங்கவிட்டதாகக் கூறி பல பத்திரிகையாளர்கள் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

கந்தஹார் மாகாணத்திற்கு மேலே தலிபான்கள் பறக்கும்போது அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் தொங்குவதை இந்த வீடியோ காட்சி காட்டுகின்றன. தரையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ, ஹெலிகாப்டரில் கீழ் கயிறில் தொங்கிய நபர் உயிருடன் இருக்கிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை.ஆனால் தலிபான்கள் தாங்கள் கொன்ற ஒரு மனிதனின் உடலை கட்டிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் கந்தஹார் நகரத்தின் மீது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது என்று தலிபானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தலிப் டைம்ஸ் கூறியுள்ளது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு குறைந்தது 7 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கியதாக டெய்லி மெயில் கூறியுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் கைவிடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

நேற்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை அவசரமாக வெளியேறியவுடன், 73 விமானங்கள், 27 ஹம்வீஸ், ஆயுத அமைப்புகள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு உபகரணங்களை முடக்கியதாகக் கூறியது.

காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க படை முழுமையாக வெளியேறிய சில மணி நேரங்களுக்குள், தலிபான்கள் விமான நிலையத்திக்குள் நுழைந்து சினூக் ஹெலிகாப்டர்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தால் விட்டுச்செல்லப்பட்ட பிற பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்தனர். பத்ரி 313 பட்டாலியன் போராளிகள் ஹெலிகாப்டர்களை ஆய்வு செய்யும் வீடியோவும் வெளியானது.

பின்னர், காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, விமான நிலைய ஓடுபாதையில் தலிபான்கள் கார்கள் மற்றும் பிற வாகனங்களை பந்தயத்தில் ஓடுவதைக் காட்டும் வீடியோக்கள் வெளிவந்தன. மேலும் அமெரிக்கா படை வெளியேறியதை தொடர்ந்து விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை வானவேடிக்கையுடன் கொண்டாடினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்