நடிகர் விவேக்கின் வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்உருவாகிறதா ?
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் தற்போது இரண்டாம் பாகம் படங்கள் உருவாவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் இரண்டாம் பாகம் திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தற்போதும் கூட இந்தியன், சதுரங்க வேட்டை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகிறது. இதனையடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வெள்ளைபூக்கள்.
இந்தப் படத்தில் நடிகர் விவேக் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படத்தில் அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு சென்று அங்கு நடக்கும் மர்மக் கொலைகளை துப்பு துலக்கி, குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதையாக அமைந்திருந்தது.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதும் பணியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளாராம்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…