அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ தடவிய ‘பார்சல்’ அனுப்பப்பட்டது குறித்து அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபருக்கு அனுப்பப்படும் அனைத்து தபால்களும் ‘ஆப்சைட் ஸ்கிரீனிங்’ முறையில் தணிக்கை செய்யப்பட்டு, அதிபரின் சிறப்பு அதிகாரிக்கு அனுப்பப்படும். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் டிரம்புக்கு வந்த ஒரு ‘பார்சல்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த பார்சல் தொகுப்பு வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்பே தடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால், பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்பிஐ) சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டிரம்ப் பெயரிட்ட தபால் பார்சல் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது? என்பது குறித்து புலனாய்வு விசாரணை நடத்தப்பட்டது.அதிபர் டிரம்பிற்கு அனுப்பப்பட்ட பார்சல் கடிதத்தில், ‘ரிச்சின்’ என்ற ஆபத்தான கொடிய விஷ பவுடர் இருந்தது.
இந்த ‘ரிச்சின்’ என்பது ஆமணக்கு பீன்ஸில் இயற்கையாகக் காணப்படும் விஷமாகும். இது பயங்கரவாத தாக்குதலில் பயன்படுத்தப்படும். இதனை உட்கொண்ட உடனே குமட்டல், வாந்தி, குடல்களின் உட்புற ரத்தப்போக்கு ஏற்படும். தொடர்ந்து கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்து சுவாச மண்டலம் பாதிக்கப்படும். அதன்பின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…