வலிமை படத்திற்கான மீதமுள்ள படக்காட்சியை எடுக்க 10 நாட்கள் நிலுவையில் உள்ளதால் அதை வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்.
நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்திற்கான டைட்டில் வலிமை என்று அறிவிக்கப்பட்ட திலிருந்து ஒரு அப்டேட் கூட வெளியாகவில்லை. இதனால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர். விரைவில் வலிமை அப்டேட் வெளிவரும் என்று காத்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் தயாராகிவிட்டதாகவும், வருகின்ற 11 ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதைபோல் வலிமை படத்திற்கான மீதமுள்ள படக்காட்சியை எடுக்க 10 நாட்கள் நிலுவையில் உள்ளதாம், அதை வருகின்ற ஏப்ரல் மாதத்தில் படக்குழு தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…