பிரெண்ட்ஷிப் படத்தை பார்த்த வேம்புலி..! என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

பிரெண்ட்ஷிப் படத்தை நடிகர் ஜான் கோக்கன் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துள்ளார்.
இயக்குனர் ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார்.
காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா பிரபலங்களும் பார்த்து தங்களது கருத்துக்களை குறிவருகிறார்கள். அந்த வகையில், சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடிகர் ஜான் கோக்கன் திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்துள்ளார்.
இந்த படம் குறித்து அவர் கூறியது ” படம் அருமையாக இருக்கிறது..பஜ்ஜி ஹர்பஜன் சிங் கலக்கிட்ட..தமிழ் திரையுலகிற்கு வரவேற்கிறோம்..எல்லாரும் இந்த படத்தை பாருங்கள்..பிரெண்ட்ஷிப் படம் இசையமைப்பாளர் உதயகுமார் உங்கள் பிஜிஎம் சூப்பராக இருக்கு..அர்ஜுன் சார் மிகவும் அருமையாக நடித்துள்ளார்.. சதிஷ் நல்ல கதாபாத்திரம் கண்டிப்பாக படம் பாருங்கள்” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025