கலை, கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைளின் சேவைக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருது, பத்ம விபூஷன், பத்ம பூஷன் , பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான (2022) பத்ம விருதுகள் வழங்கும் விழா
டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். இதில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டுள்ளார்.
நடிகை சௌகார் ஜானகி 1950 இல் எல்வி பிரசாத் இயக்கிய தெலுங்குத் திரைப்படமான ஷாவுகாரு படத்தின் மூலம் பிரபலமானார் . இந்த படத்தின் மூலம் அவருக்கு ‘சௌகார்’ என்ற பெயர் கிடைத்தது. அதன்பிறகு 1960-களின் துவக்கத்திலேயே வரிசையாக பலத்திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். 70 ஆண்டுகளுக்கு மேலாக 400-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
புதிய பறவை திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார். இந்த படத்தில் மைக்கை பிடித்துக்கொண்டு “பார்த்த ஞாபகம் இல்லையோ… பருவ நாடகம் தொல்லையோ” என்ற பாடலுக்கு அவர் மேடையில் பாடுவதும் சிவாஜி அதிர்ச்சி அடைந்து பார்ப்பதும் அந்தக்காலத்தில் மிகவும் வரவேற்கப்பட்ட காட்சி. அப்போது போலவே இப்பொதும் அந்த காட்சிகளை ரசிகர்கள் ரசித்து பார்த்து உண்டு. இவர் கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. விருதை பெற்ற இவருக்கு ரசிகர்கள் நடிகர்கள், நடிகைகள் இணையத்தின் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…