Vignesh shivan - Sabarimala Ayyappan Temple [File Image]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
சரணம் ஐயப்பா.! மகர ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் சபரிமலை ஐயப்பன்.!
பொன்னம்பல மேட்டில் இன்று மாலை 6.40 மணியளவில் சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளித்தார். இந்த மகர ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபம், பமபை உள்ளிட்ட 10 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை காண குவிந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம் காண தமிழ் சினிமா இயக்குனரும், நடிகை நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவனும் சென்றுள்ளர் . அவர் சன்னிதானத்தில் மகரஜோதி தரிசனம் காண காத்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்கு முன்னர் மலையாள நடிகர் ஜெயராம், தமிழக அறநிலையத்துறை அமைசச்ர் சேகர் பாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சாமி தரிசனம் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…