தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் நெருக்கமான உறவு வழி பெண் தான் சினேகா பிரிட்டோ. அவர் சிங்கப்பூரில் எம்பிஏ படித்து வந்துள்ளார். அவர் தற்போது சொந்தமாக ஓட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார்.
அதேபோல நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளியும் சிங்கப்பூரில் எம்பிஏ படித்து வந்துள்ளார். இவரும் தற்போது ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆகாஷும், சினேகா பிரிட்டோவும் ஒரே வகுப்பு தோழர்கள். பின்னர் இருவரும் காதலர்களாக மாறி உள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், வேறு சில காரணங்களாலும் திருமணம் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது காலம் அவர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து தற்போது இவர்கள் காதல், திருமணத்தில் கைகூட உள்ளது.
இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட உள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தளபதி விஜய் மற்றும் திரைபிரபலங்கள் என பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…