பிசாசு 2 படத்திற்காக மாஸ்டர் பவானி வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா..?

பிசாசு படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படம் பிசாசு 2.ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் சார்பில் T.முருகானந்தம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.அவருடன் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.அதன்பின் தைப்பூச நாளான்று திண்டுக்கல்லில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும்,அதற்காக 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இதற்காக நடிகர் விஜய் சேதுபதி 2 கோடி சம்பளவம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025