இன்று பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’.!
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகவுள்ள மோகன்தாஸ் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் மோகன்தாஸ்.இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் மோகன்தாஸ் படத்தினை முரளி கார்த்திக் இயக்க உள்ளார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள ஷரவந்தி சாய்நாத், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றதும் ,அதில் சைக்கோ கொலைகாரராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மோகன்தாஸ் படத்தில்
பிரபல ஸ்டண்ட் கலைஞர்களாக அன்பறிவ் பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Pictures from the pooja of #Mohandas????. All the main members of the team in one place. Shoot from today!@TheVishnuVishal @aishu_dil @Indrajith_S @im_the_TWIST @24frps @SundaramurthyKS @editorkripa @anbariv @thanga18 @shravanthis111 @proyuvraaj @divomovies pic.twitter.com/M5j4Q9TXVh
— VishnuuVishalStudioz (@VVStudioz) March 5, 2021