கடலை மாவு நம் தினசரி பயன்படுத்தும் கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்த கடலை மாவு சமையலுக்கு மட்டுமின்றி சரும பிரச்சனைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது. சில வருடங்களுக்கு முன் பெண்கள் கடலை மாவைப் பயன்படுத்தி குளித்து வந்தார்கள்.
கடலைமாவு அனைத்து சரும பிரச்சனைகளையும் போக்கும். வெயிலால் ஏற்பட்ட கருமையான சருமம் , முகப்பரு போன்றவற்றை போன்ற பிரச்சினைகளுக்கு கடலைமாவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது கடலைமாவை பயன்படுத்தி சருமத்தை எப்படி பொலிவுடன் வைத்துக் கொள்வது என்பதைப் பார்க்கலாம்.
பொலிவிழந்த சருமத்தை போக்க:
இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இந்த முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவினால் முகம் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சருமம் சுருக்கமின்றி இளமையோடு இருக்கலாம்.
எண்ணெய் பசையை நீக்க :
ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் பூசவும் சில நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.
சருமம் மென்மையாக இருக்க:
இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் அதை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவவும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…