ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தினை சுதந்திர தினத்தன்று ஹாட்ஸ்டாரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பக் காலகட்டத்தில் குரூப் டேன்சராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், பல படங்களில் நடன கலைஞராக தனது முயற்சியால் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன் பின்னர், முனி என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தற்போது இவரே இயக்கி நடித்த காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்கள் யாவும் ரசிகர்களால் பாராட்டப்பட்டவை. இவர் தற்போது சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் . அதில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர்.மேலும் இவர் இந்த படம் மே 22 ல் வெளிவரும் என்று கூறப்பட்டது. ஆனால் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக பல படங்களை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை OTT இல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கும் இந்தப் படத்தினை ஹாட்ஸ்டாரில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…