அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லாண்டாவில் கொரோனா தடுப்பு ஊசி பெறுவதற்காக இரண்டு பெண்கள் வயதானவர்கள் போல வேடமிட்டு வந்த பெண்கள் அதிகாரிகளிடம் சிக்கினர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கையிலும் உலக அளவில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லாண்டாவில் கொரோனா தடுப்பு ஊசி பெறுவதற்காக இரண்டு பெண்கள் வயதானவர்கள் போல வேடமிட்டு வந்துள்ளனர். இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுகொண்ட நிலையில், அந்தப் பெண்கள் இருவருக்கும் ஒருவருக்கு 34 மற்றும் இன்னொருவருக்கு 44 வயது என கண்டறிந்துள்ளனர்.
இந்தப் பெண்கள் இருவரும் தங்களது இரண்டாவது தடுப்பூசி பெறுவதற்காக வந்தபோதுதான் அதிகாரிகளிடம் சிக்கி உள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் தங்களது முதல் தடுப்பூசி எப்படி பெற்றனர் என்பது புரியாத புதிராக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தப் இரண்டு பெண்களின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் சுகாதார அட்டையில் இருந்த வயது வித்தியாசத்தால் ஏற்பட்ட சந்தேகம் தான் அவர்கள் சிக்க காரணமாக அமைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…