உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் – நடிகர் விஜய் ஆண்டனி..!!

விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடையில் ஒருவர் திரைப்படத்திற்கான டிரைலர் இன்று மாலை 5.01 க்கு வெளியாகும் என்று அறிவிப்பு.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’.அதனை சிரிஷ் மற்றும் பாபி சிம்ஹா நடித்து சூப்பர் ஹிட்டான மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார் .நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர், பர்ஸ்ட் லுக், பாடல்கள் என ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான டிரைலர் இன்று மாலை 5.01 க்கு வெளியாகும் என்று விஜய் ஆண்டனி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி முடிவடைந்தது என்பதை குறிப்பிடத்தக்கது.
Hi friends, இன்று மாலை 5:01 மணிக்கு கோடியில் ஒருவன் trailer release ஆகிறது????????#உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
— vijayantony (@vijayantony) April 2, 2021