, ,

உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக ஆணையத்திடம் புகார் ..!

By

தமிழக பாஜக உதயநிதி ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்துள்ளது.

திருப்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தற்காக தமிழக பாஜக உதயநிதி ஸ்டாலின் மீது தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் பிரதமர் மோடியால் தான் உயிரிழந்தனர் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023