திடீர் மழை ஏன்.? அடுத்து எங்கு மழைக்கு வாய்ப்பு.? வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைபெய்துவ வருவதாக வானிலை தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார்.
நேற்று இரவு முதல் திடீரென சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்ததது. இதனால் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இன்னும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த மழை குறித்தும், அடுத்த மழைக்கு வாய்ப்பு குறித்தும், தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, மீனம்பாக்கத்தில் 16 செ.மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழை அளவானது இந்த வருடத்தின் சராசரி மழை அளவை விட குறைவுதான் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.
மேலும், நாளை (20), மற்றும் நாளை மறுநாள் (21) லேசான, இடியுடன் கூடிய மழையானது, திருவள்ளூர், காஞ்சிபரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர் மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், டெல்டா மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,
தமிழக குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் அடுத்த 2 தினங்களுக்குக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பருவத்தில் பெய்த மழை அளவில், மீனம்பாக்கம் பகுதியில் 73 ஆண்டுகளில் இது 2வது மிகப்பெரிய மழை அளவு எனவும், நுங்கப்ப்பம் பகுதியில் 73 ஆண்டுகளில் 3வது பெரிய மழைஅளவு எனவும் தென் மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.