உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் உள்ள ‘கவுஷல் சுவீட்ஸ்’ என்ற கடையில் 12 கிலோ எடை கொண்ட ‘பாகுபலி’ சமோசா விற்கப்படுகிறது. இந்த கடைக்காரர் கவுஷல், ஒரு அதிரடி போட்டியையும் அறிவித்திருக்கிறார்.
unknown nodebahubali samosa [Image source : Indian Express]
அதாவது, ஒரு சமோசாவின் விலை ரூ.1500 என்றும், ஒரு தனிநபர் அரை மணி நேரத்தில் இந்த சமோசாவை சாப்பிட்டால் அவருக்கு ரூ.71 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த சமோசா நாட்டிலேயே மிகப்பெரியது என்று அவர் கூறியுள்ளார்.
unknown nodebahubali samosa [Image-PTI]
இந்த பிரமாண்டமான சமோசாவைத் தயாரிக்க கவுஷலின் கடையில் சமையல்காரர்களுக்கு சுமார் ஆறு மணி நேரம் ஆகுமாம். மேலும், கடாயில் சமோசாவை வறுக்க மட்டும் 90 நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்றும் மூன்று சமையல்காரர்கள் முயற்சி செய்வதாகவும் கடை உரிமையாளர் கூறுகிறார்.
unknown nodebahubali samosa meerut [Image source : DC]
இந்த உருளைக்கிழங்கு, பட்டாணி, மசாலா, பன்னீர் மற்றும் உலர் பழங்களால் நிரப்பப்பட்ட சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிக்க உங்களால் முடியுமா என்று கமெண்டில் சொல்லுங்க…
