[Representative Image]
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன்படி, இன்று தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை (30.10.2023) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…
சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…
விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…
டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…