அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை.!

மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, தி.மலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் டையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.