மிரட்டும் கனமழை.!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!
மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதன் எதிரொலியால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (மே 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக, வரும் 26, 27ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகளை கண்காணிக்க 45 குழுக்கள் மற்றும் வெள்ள நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
அரபிக்கடல் பகுதிகள்
மத்தியகிழக்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 மீட்டர் வேதக்குலும், முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேலு, வடகிழக்கு மத்தியகிழக்கு அரபிக்கடல் -பகுதிகள், கொங்கன்- கோவா, வடக்கு கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு கர்நாடக கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.